மக்காவில் தன்னார்வலர்களால் 30 மில்லியன் யாத்ரீகர்கள் பலன்!

மக்காவில் தன்னார்வலர்களால் 30 மில்லியன் யாத்ரீகர்கள் பலன்!

ரியாத்: மக்காவில் உள்ள புனித மஸ்ஜிதில் செயல்படும் தன்னார்வலர்கள் சேவைகளால் சுமார் 30 மில்லியன் வழிபாட்டாளர்கள் பயனடைந்துள்ளனர் என்று சவுதி பிரஸ் ஏஜென்சி (SPA) தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் சமூக, தன்னார்வ மற்றும் மனிதாபிமானத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 17 துறைகளில் உள்ள 35 நிறுவனங்களின் தன்னார்வத் தொண்டர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இந்த ஆண்டின் முதல் காலாண்டு வரை சுமார் 30 மில்லியன் வழிபாட்டாளர்களுக்கு சேவை செய்வதில் மொத்தம் 1.2 மில்லியன் மணிநேரங்களைச் செலவிட்டுள்ளனர்.

தன்னார்வ சேவைகளில் 5.9 மில்லியன் வழிபாட்டாளர்களுக்கு காலை உணவை வழங்குதல், 366,500 குடைகள் வழங்குதல் மற்றும் 2.3 மில்லியன் ஜம்ஜம் தண்ணீர் பாட்டில்களை விநியோகித்தல் ஆகியவை அடங்கும்.

மதீனாவில் உள்ள மஸ்ஜிதுன் நபவியில், கடந்த எட்டு மாதங்களில் 7,000 தன்னார்வலர்கள் யாத்ரீகர்களுக்கு சேவை செய்ததாக சவுதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இதன் மூலம் 350,000 மணிநேரங்கள் வயதான யாத்ரீகர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல், பாதசாரிகள் ஓட்டத்தை ஒழுங்கமைத்தல், சிறப்பு முதலுதவி வழங்குதல் மற்றும் பல மொழிகளில் இருப்பிடங்களுக்கான வழிகாட்டுதலை வழங்குதல் ஆகிய தன்னார்வ பணிகள் நடைபெற்றுள்ளன என அந்த செய்தி தெரிவிக்கிறது.