சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் வீட்டுப் பணியாளர்கள் ஸ்பான்சர்ஷிப்பை மாற்றிக்கொள்ளலாம்..!
ரியாத்: சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் அல்லது தொழிலாளர் உரிமை சார்ந்த பிற காரணங்களுக்காக வீட்டுப் பணியாளர்கள் தங்கள் தற்போதைய முதலாளிகளின் அனுமதியின்றி தங்கள் ஸ்பான்சர்ஷிப்பை மாற்றிக்கொள்ளலாம் என்று சவூதி மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொழிலாளிக்கு இகாமா வழங்காதது, 30 நாட்களுக்குப் பிறகும் இகாமாவைப் புதுப்பிக்காதது, வீட்டுப் பணியாளர்களின் சேவைகளை மற்றவர்களுக்கு சட்டவிரோதமாக மாற்றுவது, உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான வேலையைச் செய்ய தொழிலாளர்களை கட்டாயப்படுத்துவது, தவறான நடத்தை போன்ற பிரச்சினைகள் இதில் அடங்கும்.
புதிய விசாவில் சவுதி அரேபியாவிற்கு வரும் வீட்டுப் பணியாளர்கள், 15 நாட்களுக்குள் விமான நிலையங்கள் அல்லது புகலிட மையத்தில் இருந்து ஸ்பான்சர் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும், அவர்களின் ஸ்பான்சர்ஷிப் மாற்றப்படலாம்.