குவைத்தில் காரைக் கழுவாததற்காக வெளிநாட்டவரை அடித்த அதிகாரி கைது!

குவைத்தில் காரைக் கழுவாததற்காக வெளிநாட்டவரை அடித்த அதிகாரி கைது!

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளியை தாக்கிய சம்பவத்தில் உள்துறை அமைச்சக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். தினமும் காரை கழுவ வேண்டும் என அறிவுறுத்தியும் கடந்த மூன்று நாட்களாக காரை கழுவாமல் இருந்ததால் அதிகாரி கோபமடைந்தார். இதையடுத்து தொழிலாளியை அடித்து உதைத்துள்ளார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த சம்பவத்தில் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். தாக்குதல் நடத்தியவருக்கு எதிராக மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது. நாட்டின் சட்டங்களுக்கு மேலானவர்கள் யாரும் இல்லை என அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான வெளிநாட்டவர் பங்களாதேஷ் பிரஜை என குவைத்தில் உள்ள உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.