குவைத்தில் மருந்துக்கு கட்டணம் அறிவிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு வரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது..!

குவைத்தில் மருந்துக்கு கட்டணம் அறிவிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு வரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது..!

குவைத்தில், அரசு சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் வெளிநாட்டவர்களுக்கு மருந்துக் கட்டணத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து, மருத்துவமனைகளுக்கு வரும் வெளிநாட்டு நோயாளிகளின் எண்ணிக்கை 60 சதவீதம் குறைந்துள்ளதாக, உள்ளூர் செய்தித்தாள் அல் செயஸ்ஸா தெரிவித்துள்ளது.

முன்பு நாள் ஒன்றுக்கு 1,200 நோயாளிகள் வந்த கிளினிக்குகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை 400க்கும் குறைவாகவே குறைந்துள்ளது.  முன்னர் இலவசமாக வழங்கப்பட்ட மருந்துக்களுக்கு தற்போது கட்டணத்தை சுகாதார அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் 5 தினார்களும், மருத்துவமனைகளில் 10 தினார்களும் மருத்துவக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேநேரம் சர்க்கரை நோய் மருத்துவமனைகள் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.