-0.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையால் ஓமன் ஜபல் ஷாம்ஸில் உறைபனி!
ஓமன் சுல்தானகத்தின் ஜபல் ஷாம்ஸ் -ல் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை -0.9 டிகிரி செல்சியஸ் ஆகும். பூஜ்ஜியத்திற்கு கீழே வெப்பநிலை வீழ்ச்சியடைந்ததால் ஜபல் ஷாம்ஸின் மேல் உறைபனி உருவானது.
ஓமன் வானிலை ஆய்வுகளின்படி, அல் தகிலியா கவர்னரேட்டில் உள்ள ஜபல் ஷம்ஸ் நிலையத்தில் -0.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து தெற்கு அல் ஷர்கியா கவர்னரேட்டில் உள்ள சைக் நிலையம் 3.5 டிகிரி செல்சியஸூம், அல் அல் தகிலியா கவர்னரேட்டில் உள்ள ஹம்ரா நிலையத்தில் 11.4 டிகிரி செல்சியஸூம், நிஸ்வா ஸ்டேஷன் மற்றும் டாங்க் ஸ்டேஷன் ஒவ்வொன்றிலும் 12.5 டிகிரி செல்சியஸூம் பதிவானது.