அபுதாபியில் ஓட்டுநர் இல்லாத ஸ்மார்ட் மினி பேருந்துகள் அதிகரிப்பு..!
புதாபி: ஓட்டுநர் இல்லாத வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அபுதாபியில் போக்குவரத்து மேம்படுகிறது. 6 மினி ரோபோ பேருந்துகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் யாஸ் தீவில் ஸ்மார்ட் வாகனங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படும். படிப்படியாக மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் தெரிவித்துள்ளது. யாஸ் மற்றும் சாதியாத் தீவுகளில் மொத்தம் 17 ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் மற்றும் டாக்சிகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.