அபுதாபி பிக் டிக்கெட் வீக்லி டிராவில் 24 காரட் ஒரு கிலோ தங்கம் வென்ற முருகேசன்!

அபுதாபி பிக் டிக்கெட்  வீக்லி டிராவில் 24 காரட் ஒரு கிலோ தங்கம் வென்ற முருகேசன்!

அபுதாபியில் நடைபெற்று வரும் பிக் டிக்கெட்டில் (Big Ticket draw) மாதாந்திர டிராவுடன் சேர்த்து சமீப காலமாக வாராந்திர டிராவும் (weekly e-draw) நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற இந்த மாத ‘பிக் டிக்கெட்’இன் முதல் வாராந்திர இ-ட்ராவில் அபுதாபியில் பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த அபிராம் முருகேசன் என்பவர் ஒரு கிலோ கிராம் 24 காரட் தங்கத்தை வென்றுள்ளார்.

டிசம்பர் 1 முதல், பிக் டிக்கெட் வாங்குபவர்கள் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் இ-டிராவில் ஒரு கிலோ 24 காரட் தங்கத்தை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள் அதன் முதல் அதிர்ஷ்டசாலியாக முருகேசன் தேர்வு வென்றுள்ளார். 

கடந்த பல வருடங்களாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வரும் முருகேசனுக்கு பிக் டிக்கெட் பற்றி சமூக வலைதளங்கள் மூலம் தெரிய வந்தது. இந்த ஆண்டு, அவர் எடுத்த முதல் டிக்கெட்டுக்கு வாராந்திர டிராவில் ஒரு கிலோ தங்கம் பரிசு கிடைத்தது.

 டிக்கெட் வாங்கிய சில நாட்களுக்குப் பிறகு, அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் பரிசுத் தகவல் வந்தது. பிக் டிக்கெட் பிரதிநிதி பரிசுத் தகவலைத் தெரிவித்தபோது, ​​​​அவரால் தனது மகிழ்ச்சியை மறைக்க முடியவில்லை. அபிராம் முருகேசன் மூன்று நண்பர்களுடன் சேர்ந்து இந்த டிக்கெட் வாங்கியுள்ளார். அவர் பரிசு பெற்றவுடன், அவர் அதை நாட்டில் நிலத்தில் முதலீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அடுத்த கோடீஸ்வரர்களாக மாற, வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு காத்திருக்கிறது. டிக்கெட்டுகளை பிக் டிக்கெட் இணையதளத்தில் இருந்தும் www.bigticket.ae, அபுதாபி சர்வதேச விமான நிலையம் மற்றும் அல்ஐன் விமான நிலையத்தில் உள்ள பிக் டிக்கெட் ஸ்டோர் கவுண்டர்கள் மூலமாகவும் வாங்கலாம். 

பிக் டிக்கெட் பற்றிய சமீபத்திய தகவல் மற்றும் செய்திகளை அறிய, அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்களைப் பார்வையிடவும்.

பிக் டிக்கெட்டின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.bigticket.ae மற்றும் சமூக ஊடக தளங்களில், உத்தரவாதமான டிரா பரிசுகளை வென்றவர்களின் விவரங்கள் அடுத்த நாட்களில் வெளியிடப்படும்.