கத்தார் வரலாற்று திரைப்படத்தில் நீங்களும் நடிக்கலாம்! - DFI அழைப்பு
தோஹா: தோஹா ஃபிலிம் இன்ஸ்டிடியூட் (DFI), கத்தார் திரைப்படத் தயாரிப்பு வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்க விரும்பும் நடிகர்களை அழைக்கிறது. பாலினத்தைப் பொருட்படுத்தாமல் கத்தார் ஐடியைக் கொண்ட எவரும் விண்ணப்பிக்கலாம்.
எந்த வயதினரும், நாட்டினரும் நடிக்க விண்ணப்பிக்கலாம். தோஹா பிலிம் இன்ஸ்டிடியூட் நாட்டின் மிக முக்கியமான திரைப்படத் திட்டங்களில் ஒன்றைத் தயாரிக்கப் போகிறது.
கத்தார் முழுவதும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. DFI இன் அதிகாரப்பூர்வ சமூக ஊடக சேனல்கள் மூலம் நடிகர்கள் அழைக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டுள்ளனர்.