இந்தியாவில் இருந்து 1,75,000 பேருக்கு மட்டுமே புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு!

இந்தியாவில் இருந்து 1,75,000 பேருக்கு மட்டுமே புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு!

ஜித்தா: இம்முறை இந்தியாவில் இருந்து 1,75,000 பேருக்கு மட்டுமே புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கான சவுதி அரேபியாவுடனான ஒப்பந்தத்தில் இந்திய துணைத் தூதர் ஷாகித் ஆலம் கையெழுத்திட்டார். 

இந்தியாவில் இருந்து மட்டும் 1,75,000 ஹாஜிகள் தனியார் துறை மற்றும் மத்திய ஒதுக்கீட்டில் இருந்து ஹஜ்ஜுக்காக வருகிறார்கள். இந்தியா உட்பட 53 நாடுகளுடன் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. வரும் நாட்களில் மேலும் பல நாடுகளுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

இந்த நேரத்தில் எந்த வயதினரும் ஹஜ் செய்யலாம். இம்முறை கோவிட் சூழ்நிலை காரணமாக வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளது. ஹாஜிகள் இம்முறை தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட ஹஜ்ஜை காணவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.