மஸ்கட் டூட்டி ப்ரீ நடத்திய கேஷ் ரேஃபிளில் முதல் மூன்று பரிகளை அள்ளிய மலையாளிகள்!

மஸ்கட் டூட்டி ப்ரீ நடத்திய கேஷ் ரேஃபிளில் முதல் மூன்று பரிகளை அள்ளிய மலையாளிகள்!

மஸ்கட்: ஓமனில் உள்ள மஸ்கட் டூட்டி ப்ரீ நடத்திய "பண ரேஃபிள்" (Cash Raffle) குலுக்கல்லில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் முதல் மூன்று பரிசுகளையும் வென்றுள்ளனர். வெற்றியாளர்கள் மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் மஸ்கட் நகராட்சி அதிகாரிகளின் மேற்பார்வையில் அறிவிக்கப்பட்டனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு மஸ்கட் டூட்டி ப்ரீ தலைமையகத்தில் தலைமை செயல் அதிகாரி ரெனாட் ரோஸ்பிரவாகா பரிசுகளை வழங்கினார். முதல் பரிசாக திருச்சூர் சேலக்கோட்டை சேர்ந்த சன்னி ஜார்ஜ் ரூ.80 லட்சமும், 2-வது பரிசாக ரு.20 லட்சம் திருவனந்தபுரம் மணக்காட்டை சேர்ந்த பைசல் பஷீருக்கும், 3-வது பரிசாக ரூ.8 லட்சம் கொல்லம் முண்டக்கல்லை சேர்ந்த அஜி ராஜகோபால் என்பவருக்கும் வழங்கப்பட்டது.