1000 இந்திய & நேபாள பெண்களை வேலைக்கு சேர்க்கும் குவைத் கல்வி அமைச்சகம்!

1000 இந்திய & நேபாள பெண்களை வேலைக்கு சேர்க்கும் குவைத் கல்வி அமைச்சகம்!

குவைத் அரசாங்கத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த சுமார் 1,000 பெண் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு கல்வி அமைச்சகம் ஒப்பந்தங்களை மேற்கொள்ள முனைகிறது.

கல்வி அமைச்சின் நிர்வாக விவகாரங்கள் மற்றும் நிர்வாக மேம்பாட்டுத் துறையானது, கல்வி அமைச்சக தேவைகளை பூர்த்தி செய்ய 1,000 பெண் தொழிலாளர்களை இந்தியா மற்றும் நேபாளத்திற்குச் சென்று ஆட்சேர்ப்பு செய்வதற்காக 'வெளிநாட்டு ஒப்பந்தக் குழுக்களை' அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்குமாறு சிவில் சர்வீஸ் கமிஷனிடம் முறையாகப் பேசியதாக ஒரு உள்ளூர் அரபு நாளிதழ் தகவலறிந்த ஆதாரங்களில் இருந்து அறிவித்திருக்கிறது.

கல்விப் பகுதிகள் மற்றும் அமைச்சகத்தின் பொது அலுவலகம் ஆகியவற்றில், உள்ளூர் ஒப்பந்தம் மூலம் தேவையான எண்ணிக்கையிலான துப்புரவுத் தொழிலாளர்களை கல்வி அமைச்சகம் பூர்த்தி செய்ய முடியாததால், குறிப்பாக பள்ளிகளில் இந்த வேலை தொடர்ந்து தேவைப்படுவதால்,  சிவில் சேவை ஆணைக்குழு (CSC)வின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, குழுக்கள் அடுத்த டிசம்பரில் குவைத்திலிருந்து இந்தியா, நேபாளம் சென்று ஆட்களை தெர்வு செய்யும் என தெரிகிறது.