‘ஸ்கேன், பே, கோ’ - துபாயில் புதிய ஏர்போர்ட் பார்க்கிங் சிஸ்டம் அறிமுகம்!
துபாய் சர்வதேச விமான நிலையங்களில் இனி பார்க்கிங் கட்டணம் செலுத்த இயந்திரங்கள் முன் காத்திருக்க வேண்டாம். அதனை எளிமைப்படுத்தும் வகையில் ‘ஸ்கேன், பே, கோ’ (‘Scan, Pay and Go’) என்ற புதிய முறை பார்க்கிங் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாஸ்டர் கார்டு, விசா கார்டு மற்றும் ஆப்பிள் பே பேமெண்ட் சிஸ்டம் மூலம் இதனை பயன்படுத்தப்படலாம்.
கட்டணம் செலுத்துவது எப்படி?
- விமான நிலைய வாகன நிறுத்துமிடத்திற்குள் நுழையும் போது கிடைக்கும் டிக்கெட்டில் உள்ள QR குறியீட்டை உங்கள் தொலைபேசி மூலம் ஸ்கேன் செய்யலாம்.
- அதன் மூலம் ஸ்மார்ட் போன்களில் கட்டணம் செலுத்தும் வசதி கிடைக்கும்.
- கார்டு மூலமாகவோ அல்லது ஆப்பிள் பே மூலமாகவோ பணம் செலுத்த நீங்கள் தேர்வு செய்யலாம்.
புதிய அமைப்பு ‘மவாகிஃபு’ உடன் இணைந்து செயல்படுகிறது. பார்க்கிங் கட்டணம் செலுத்த இயந்திரங்கள் முன் காத்திருக்க வேண்டாம். வாகனத்தின் உள்ளே அமர்ந்து பணம் செலுத்தலாம். கட்டணத்தைச் செலுத்திய பிறகு, 10 நிமிட போனஸ் நேரம் வழங்கப்படும், எனவே இந்த நேரத்தில் வாகனங்கள் பார்க்கிங் மண்டலத்திலிருந்து வெளியேறலாம். பார்க்கிங் கட்டணம் செலுத்தும் முறையைப் பின்பற்றி புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.