இந்தியாவுக்கு செல்ல Go First டிக்கெட் விலை 301 திர்ஹம் மட்டுமே! - இன்று மட்டும்
குடியரசு தினத்தையொட்டி Go First விமானத்தில் அதிரடி சலுகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அபுதாபியில் இருந்து கொச்சி, கண்ணூர், டெல்லி மற்றும் மும்பை ஆகிய பகுதிகளுக்கும், துபாயில் இருந்து கண்ணூருக்கும் பயணம் செய்ய குறைந்த கட்டணம் AED 301 ஆகும். இன்று இரவு 12 மணி வரை டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு பலன் கிடைக்கும். பிப்ரவரி 12 முதல் செப்டம்பர் 30 வரை இந்த டிக்கெட்டுடன் பயணிக்கலாம் என GoFirst அறிவித்துள்ளது.