ஜபீல் பூங்காவில் நடைபெறும் அமீரக வாழ் நீலகிரி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
அமீரக வாழ் நீலகிரி மக்கள் (NRI NILGIRS UAE) சந்திப்பு-2022 இன்று நடைபெறுகிறது. துபாய் ஜாஃபிலியா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஜபீல் பூங்காவில் மதியம் 12 மணி முதல் மாலை 4:30 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.
தமிழ் குடில் நிறுவனர் மகாதேவன், ஆர்.ஜே.சாரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அனைத்து நீலகிரி மக்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறு நீலகிரி என்ஆர்ஐ கன்வீனர்கள் முஜீப் ரஹ்மான் கூடலூர் மற்றும் ரம்ஷாத் பட்டாவியல் கேட்டுக்கொண்டனர்.