துபாயில் நடைபெற்ற அமீரக வாழ் நீலகிரி மக்கள் மன்றத்தின் சந்திப்பு நிகழ்ச்சி!
அமீரக வாழ் நீலகிரி மக்கள் (Nilgiri NRI) மன்றத்தின் 2022ம் ஆண்டு குடும்ப சந்திப்பு ஒன்றுகூடல் நிகழ்ச்சி துபாய் ஜபீல் பூங்காவில் நடைபெற்றது. மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் கூடலூர் முஜீப் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சமூக ஆர்வலரும் தமிழ்க்குடில் நிறுவனருமான மகாதேவன், வானொலி புகழ் திருமதி ஆர்.ஜே.சாரா மற்றும் துபாய் புல்லிங்கோ டிக் டாக் குழுவினர் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து எமிரேட்ஸின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் ரம்ஷாத், ஷமீர், போஸ்கோ, பிரிஷேஜ், அனஸ், அக்பர், ஷாகுல், மேரி, சித்திக், ஷிஹாப், மிக்தாத், ஜாகீர், அப்சல், ஷபீக் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.