உங்கள் குழந்தைகளை நிதி ரீதியாக "புத்திசாலி" ஆக்குவது எப்படி
சிறு வயதிலிருந்தே குழந்தைகளிடம் நிதி விழிப்புணர்வை உருவாக்கவும், மேம்படுத்தவும் நான்கு வயதிலேயே பணத்தின் கருத்தைப் பற்றி குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை சில வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். இது அவர்கள் வளரும்போது திறம்பட திட்டமிடவும் சிறந்த நிதி முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
"Get a Financial Life" புத்தகத்தின் ஆசிரியரான Beth Kobliner, மூன்று வயதில், ஒரு குழந்தை சேமிப்பு மற்றும் செலவு போன்ற பணத்தைப் பற்றிய கருத்துக்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்று கூறுகிறார்.
ஆறு முதல் பத்து வயது வரை குழந்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்பதை அறிய உகந்த வயதாகும். தான் விரும்பும் அனைத்தையும் கொண்டு வர பணம் போதுமானதாக இருக்காது என்பதையும், அவர் தேர்வு செய்ய வேண்டும். இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் மற்றும் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை குழந்தை உணரும் தருணம் இதுவாகும்.
தினசரி மற்றும் இயற்கையான அடிப்படையில் பணத்தைப் பற்றிய திறந்த உரையாடலைத் தொடங்குவது மற்றும் அதை சம்பாதிப்பது மற்றும் செலவு செய்வது ஆகியவை குழந்தைகளிடம் சேமிப்புக் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு உதவும் வழிகளில் ஒன்றாகும். பணத்தின் கருத்து மற்றும் நம் வாழ்வில் அதன் பங்கு பற்றிய விழிப்புணர்வை வளர்ப்பதில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
குழந்தைகளுடன் பண விஷயங்களைப் பற்றி எவ்வளவு வெளிப்படையாகப் பெற்றோர்கள் பேசுகிறார்களோ, அப்போது குழந்தைகள் அவர்களின் வயதுக்கு ஏற்ப எதிர்காலத்தில் அதை புத்திசாலித்தனமாகவும், திறமையாக சமாளிக்கவும் அவர்கள் தங்களை தயார்படுத்த தயாராக இருப்பார்கள்.
நிதி நிபுணரான சுஹா மோர்டதா தனது பங்கிற்கு, “ஒரு தொடக்கமாக, குழந்தைகளுக்கு எளிய சேமிப்புத் திட்டத்தைத் தயாரிக்க முடியும். எடுத்துக்காட்டாக, குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட பொம்மை மீது ஆர்வம் இருந்தால், அதை வாங்குவதற்கு ஒரு நிதித் திட்டத்தை உருவாக்க பெற்றோர்களாகிய நாம் அவருக்கு உதவ வேண்டும். அதே நேரத்தில் ஒரு பகுதியைச் சேமிப்பதற்குப் பதிலாக அவரது அனைத்து செலவுகளையும் செலவிட விரும்பினால் அவருக்கு நினைவூட்ட வேண்டும். அதன்படி, பொறுப்பின் அர்த்தத்தையும், பின்னர் பெரிய இலக்குகளை அடைவதற்கான உடனடி ஆசைகளை எவ்வாறு தள்ளிப்போடுவது என்பதையும் அவர் கற்றுக்கொள்வார். அதன்பிறகு அவர் நீண்ட காலத்திற்கு தனது சேமிப்பின் மதிப்பைப் பற்றி சிந்திக்கத் தொடங்குவார்.” என்கிறார்.
“செலவினங்களைக் கண்காணிப்பது எப்படி என்பதை குழந்தைக்குக் கற்பிப்பதும் முக்கியம். இதன் மூலம் அவர் மாதந்தோறும் அவர் என்ன செலவழிக்கிறார் மற்றும் எதைச் சேமிக்கிறார் என்பதை உணர முடியும். குழந்தை தனது குறிப்பேட்டில் இதை எழுதலாம். இது அவரது வரவு செலவுத் திட்டத்தில் செலவினத்தின் தாக்கத்தைக் காட்சிப்படுத்தவும், விரும்பிய தொகையை அடைய சேமிப்பின் முக்கியத்துவத்தை உணரவும் அவரைத் தூண்டும்.
பொதுவாக, குழந்தைகள் தங்கள் பெற்றோரைப் பின்பற்றி அவர்களின் இயல்பான நடத்தை முறைகளைப் பின்பற்ற முயல்கின்றனர். பணம் எளிதில் வந்துவிடாது, அதற்கு நேரமும் முயற்சியும் தேவை என்பதை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். சேமிப்புக் கணக்கின் அம்சங்கள், கிரெடிட் கார்டின் கருத்து மற்றும் அதன் சரியான பயன்பாடு ஆகியவற்றை அறிமுகப்படுத்த, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன் சேமிப்புப் பணப் பெட்டியை(உண்டியல்) அமைக்க முயற்சிக்க வேண்டும் அல்லது வங்கிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
மறுபுறம், குழந்தைகளை வீட்டுத் தேவைகளை வாங்குவதற்கு அழைத்துச் செல்வதன் மூலம் நிதி முடிவுகளை எடுப்பது மற்றும் எல்லாவற்றிலும் கணிதத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைக் கவனிக்க அனுமதிக்க வேண்டும். அங்கு அவர்கள் விலைகளைப் படிக்கவும், எண்களை ஒப்பிடவும் மற்றும் பொருட்களை ஒப்பிடவும் வாய்ப்பு பெறுகிறார்கள். நமது அன்றாட வாழ்வில் பணம் இன்றியமையாதது என்பதை அவர்கள் உணரும்போது, அதன் மதிப்பை அவர்கள் புரிந்துகொள்வார்கள்” என்றும் சுஹா கூறினார்.