சவுதி பெண்ணை மணக்கும் ஜோர்டான் இளவரசர்!
ரியாத்: ஜோர்டான் பட்டத்து இளவரசர் உசேன் பின் அப்துல்லா சவூதி அரேபியாவின் ரியாத்தை சேர்ந்த ராஜ்வா காலித் பின் முசைத் பின் சைஃப் பின் அப்துல் அஜீஸ் அல் சைஃப் என்ற பெண்ணை திருமணம் செய்யவிருப்பதாகவும், இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் ஜோர்டான் ராயல் கோர்ட் அறிவித்துள்ளது.
இதற்காக ஜோர்டான் அரச குடும்பத்தைச் சேர்ந்த பல முக்கியஸ்தர்கள் கடந்த வாரம் சவுதி அரேபியா வந்தடைந்தனர். சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவை அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாக சவுதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
View this post on Instagram
விரைவில் திருமணம் செய்யவிருக்கும் ஜோர்டானிய பட்டத்து இளவரசர் ஹுசைன் மற்றும் அவரது மணமகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துவதாக இளவரசர் முகமது பின் சல்மான் அறிவித்துள்ளார்.
28 வயதான இளவரசர் ஹுசைன், பிரிட்டிஷ் ராணுவ அகாடமியில் பட்டம் பெற்றவர். தற்போது ஜோர்டானிய ராணுவத்தில் கேப்டன் பதவியில் உள்ளார்.
28 வயதான ராஜ்வா காலித் சவுதி அரேபியாவின் ரியாத்தில் பிறந்தார். சவுதி அரேபியாவில் தனது ஆரம்பக் கல்விக்குப் பிறகு, நியூயார்க்கில் கட்டிடக்கலை படிப்பை முடித்துள்ளார்.