காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் தீவிர பசி 123% அதிகரித்துள்ளது: ஆக்ஸ்பாம்

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் தீவிர பசி 123% அதிகரித்துள்ளது: ஆக்ஸ்பாம்

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் கடந்த ஆறு ஆண்டுகளில் 123% தீவிர பசி அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்பாம் தெரிவித்துள்ளது. 

'உலகில் வெப்பம் உண்டாக்கும் பசி' என்ற பகுப்பாய்வின்படி, மிகவும் பாதிக்கப்பட்ட பத்து நாடுகளில் ஆறு ஆண்டுகளில் கடுமையான பசி 123% உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தான், புர்கினா பாசோ, ஜிபூட்டி, குவாத்தமாலா, ஹைட்டி, கென்யா, மடகாஸ்கர், நைஜர், சோமாலியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் சுமார் 48 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியை அனுபவித்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டில், இந்த நாடுகளில் 21 மில்லியன் மக்கள் கடுமையான பசியை அனுபவித்த நிலையில், தற்போது இருமடங்கிற்கும் அதிகமான மக்கள் பசியால் பாதிக்கப்பட்டுள்ளது என ஐ.நா. கவலையை தெரிவித்துள்ளது.