ஹயா கார்டு மூலம் வருகை தந்தவர்கள் கத்தாரில் தங்கியிருக்கும் காலம் இன்றுடன் நிறைவு!

ஹயா கார்டு மூலம் வருகை தந்தவர்கள் கத்தாரில் தங்கியிருக்கும் காலம் இன்றுடன் நிறைவு!

தோஹா:ஹயாகார்டு மூலமாக வருகை தந்தவர்கள் கத்தாரில் தங்கியிருக்கும் காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து சட்டத்தை மீறி நாட்டில் தங்கினால், சட்டவிரோதமாக தங்கியதற்கு அபராதம் செலுத்த வேண்டும். கத்தார் உலகக் கோப்பையின் ஃபேன் ஐடியான ஹயா கார்டு நவம்பர் 1 முதல் கத்தார் நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதியாக இருந்தது. ரசிகர்கள் மட்டுமின்றி இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் இதனால் பயனடைந்தனர். 

இந்த அட்டையை பயன்படுத்தி நவம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை கத்தாருக்குள் நுழைய  அனுமதி இருந்தது. அவ்வாறு வருகை தந்தவர்கள்  திரும்பும் காலம் இன்றுடன் முடிவடைகிறது. பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் கத்தாருக்குள் வந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்காவிலிருந்து வந்தவர்கள் உலகக் கோப்பை முடிந்து ஒரு வாரத்தில் திரும்பினர். ஆனால் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து வந்தவர்களில் சிலர் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று (ஜனவரி 23ம் தேதிக்குள்) திரும்ப வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இல்லாவிட்டால் சட்டவிரோதமாக தங்கியதற்காக அபராதம் செலுத்த வேண்டும்.