ஸ்வீடனில் புனித குர்ஆன் எரிப்பு - அரபு நாடுகள் கண்டனம்
![ஸ்வீடனில் புனித குர்ஆன் எரிப்பு - அரபு நாடுகள் கண்டனம்](https://arabtamilnews.com/uploads/images/2023/01/image_750x_63ce7c5e2dad8.jpg)
அபுதாபி/ரியாத்/குவைத்: ஸ்வீடனில் உள்ள துருக்கிய தூதரகம் முன் குரான் எரிக்கப்பட்டதற்கு ஜிசிசி மற்றும் அரபு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மனிதாபிமான மற்றும் தார்மீக விழுமியங்கள் மற்றும் கொள்கைகளுக்கு முரணான, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இத்தகைய நடவடிக்கைகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று வளைகுடா நாடுகளின் (GCC) வெளியுறவு அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரத்தில் தீவிர வலதுசாரி ஆர்வலர் ஒருவரை விடுவிக்கும் ஸ்வீடன் அதிகாரிகளின் முடிவை சவுதி அரேபியா ஏற்கவில்லை. குவைத், ஓமன், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. முஸ்லீம் உலக லீக், ஓஐசிசி மற்றும் ஜிசிசி ஆகியவையும் எதிர்ப்பை பதிவு செய்தன.