வசந்த காலத்தில் அபுதாபி நகரை வண்ணமயமாக்கும் பூக்களின் மலர்ச்சி!

வசந்த காலத்தில் அபுதாபி நகரை வண்ணமயமாக்கும் பூக்களின் மலர்ச்சி!

அபுதாபி நகரம் இயற்கை வண்ண மலர்களால் மலர்ந்துள்ளது. பெட்டூனியா, சாமந்தி, ஏஜெரட்டம், செம்பருத்தி, காஸ்மோஸ், கார்னேஷன் போன்ற 8 மில்லியன் பூச்செடிகளை நடவு செய்தன் மூலம் நகரம் வண்ண வண்ண பூங்களால் வண்ணமயமானது. அபுதாபி நகர முனிசிபாலிட்டி நகரை அழகுபடுத்தும் ஒரு பகுதியாக இந்த திட்டத்தை முன்னெடுத்தது. ஒவ்வொரு பகுதியின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு வெவ்வேறு செடிகள் நடப்பட்டன. 

பூத்துக் குலுங்கும் பூக்களின் அழகை ரசிக்க வருபவர்களும், அதன் பின்னணியில் செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்பவர்களும் உண்டு. ஊரின் அழகை உறவினர்களுக்கு வீடியோ கால் மூலம் காட்டுபவர்கள் ஏராளம். சாலையின் இருபுறமும், நடுவில், ரவுண்டானா, பாலங்கள், நடைபாதைகள் மற்றும் பூங்காக்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

அபுதாபி கார்னிச், அல்பேதீன் பகுதி, முசாபா சாலை, ஷேக் ரஷீத் பின் சயீத் தெரு, ரப்தான் கார்டன், அல் வத்பா, ஷேக் சயீத் ஃபெஸ்டிவல், அரேபியன் வளைகுடா தெரு, யாஸ் தீவு மற்றும் அல் வத்பா பார்க் ஆகிய இடங்களில் 5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் மலர் மரங்கள் நடப்பட்டுள்ளதாக நகராட்சி தெரிவித்துள்ளது. சில பூக்களின் நறுமணமும் மக்களை ஈர்க்கிறது.

மக்களின் மகிழ்ச்சியை கருத்தில் கொண்டு, செலவழித்து பூத்துள்ள பூக்களை முடிந்தவரை ரசிக்கவும், அதனை பறித்து அசுத்தம் செய்யாமல் இருக்குமாறும் நகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. மீறுபவர்களுக்கு 500 திர்ஹம் (ரூ 11,000) அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.