பள்ளி வாகனங்களின் ஸ்டாப் சைனை மறவாதீர்கள்...!
அபுதாபி: விடுமுறை முடிந்து மாணவர்கள் திங்கள்கிழமை பள்ளிகளுக்குத் திரும்புவதால் வாகன ஓட்டிகள் கவனமாகவும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றவும் அபுதாபி காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
மாணவர்களை பேருந்தில் ஏற்றவோ, இறக்கவோ பள்ளி வாகனம் நிறுத்தும் இடத்தில் நின்றால், மற்ற வாகனங்களையும் நிறுத்த வேண்டும் என்பது அமீரகத்தில் சட்டமாகும். இதனை மீறும் வாகனங்களுக்கு ஸ்டாப் சைனில் நிறுவப்பட்ட கேமரா, விதிமீறலைப் படம்பிடிக்கும். கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ள கேமரா தகவலின்படி 1000 திர்ஹம் (ரூ. 22500) அபராதம் உடனடியாக விதிக்கப்படும். அதேபோல் குழந்தைகளை ஏற்றி இறக்கும் போது ஸ்டாப் சைன் நிறுத்தப் பலகைகளை வைக்கத் தவறும் பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கும் 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படுகிறது.