துபாயில் 500 திர்ஹம்களுக்கு நகை வாங்கி 25 கிலோ தங்கத்தை பெறும் அதிர்ஷ்டசாலியாகுங்கள்!
துபாய்: அமீரகத்தில் நகைத் துறையில் மிகப்பெரிய சில்லறை வணிகச் சங்கிலியான துபாய் ஜூவல்லரி குரூப் (டிஜேஜி), அதன் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் (டிஎஸ்எஃப்) பிரச்சாரத்தின் மூலம் குடியிருப்பாளர்களின் வாழ்க்கையில் மேலும் பிரகாசத்தைக் கொண்டுவருகிறது. முந்தைய ஃபெஸ்டிவல் சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து, புதிய சீசனுக்கான பிரச்சாரத்திலும் துபாய் ஜூவல்லரி குழுமம் ஈடுபட்டுள்ளது.
2022-2023 ஆம் ஆண்டிற்கான துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் ( DSF) நாளை (டிசம்பர் 15) தொடங்குகிறது. இந்த சீசன் நாட்களில் நகை விற்பனை நிலையங்களில் இருந்து AED 500 அல்லது அதற்கு மேல் வாங்கும் வாடிக்கையாளர்கள் துபாய் ஜூவல்லரி குரூப் (DJG) டிராவில் பங்கேற்று தலா கால் கிலோ தங்கத்தை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். ஒவ்வொரு மாற்று நாளிலும் நான்கு பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மொத்தம் 100 அதிர்ஷ்டசாலிகளுக்கு 25 கிலோ தங்கம் பரிசாக வழங்கப்படும்.
கூடுதல் விவரங்கள்:
AED 500 மதிப்புள்ள தங்க நகைகளை வாங்குபவர்களுக்கு ஒரு ரேஃபிள் கூப்பனும், AED 500 மதிப்புள்ள வைரம் மற்றும் முத்து வாங்குபவர்களுக்கு இரண்டு ரேஃபிள் கூப்பன்களும் வழங்கப்படும். ஒவ்வொரு மாற்று நாள் டிராவிலும் 4 வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு தலா 250 கிராம் தங்கம் பரிசாக வழங்கப்படும். சீசன் நாட்களில் மொத்தம் 25 கிலோ தங்கம் வழங்கப்படும்.
துபாய் ஜூவல்லரி குரூப் (DJG) இன் கீழ் உள்ள 235 விற்பனை நிலையங்களில் இந்தச் சலுகை கிடைக்கிறது.
பிரச்சாரத்தில் பங்கேற்கும் சில்லறை விற்பனை நிலையங்கள் பற்றிய விவரங்களுக்கு, தேதிகள் மற்றும் இடங்கள் மற்றும் பலவற்றைப் பார்க்க, www.dubaicityofgold.com ஐப் பார்வையிடவும்.