அமீரகத்தில் இனி விசிட் விசாவை நீட்டிக்க நாட்டை விட்டு வெளியேற வேண்டும்!

அமீரகத்தில் இனி விசிட் விசாவை நீட்டிக்க நாட்டை விட்டு வெளியேற வேண்டும்!

அபுதாபி:  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விசிட் விசா வைத்திருப்பவர்கள் தங்கள் விசாக்களை நாட்டிற்குள் இருந்து மாற்றிக்கொள்ளலாம் என்ற விதிவிலக்கு மாற்றப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கி இனி விசிட் விசாவை நீட்டிக்க முடியாது.  வருகையாளர் விசாவை புதுப்பிப்பதற்காக நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த உத்தரவு ஷார்ஜா மற்றும் அபுதாபி எமிரேட்டுகளில் அமலுக்கு வந்தது. இந்த புதிய உத்தரவு துபாயில் அமலுக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக பார்வையாளர் விசாவில் உள்ளவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கி கூடுதல் கட்டணம் செலுத்தி விசாவைப் புதுப்பித்து வந்தனர். இனி விசாவை புதுப்பிக்க அல்லது வேறு விசாவிற்கு மாற விரும்பினால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.  குடியுரிமை விசாக்களுக்கு இது பொருந்தாது.