பிப்.26ல் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் அமீரக விண்வெளி வீரர் சுல்தான் அல் நியாதி!

பிப்.26ல் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் அமீரக விண்வெளி வீரர் சுல்தான் அல் நியாதி!

ஐக்கிய அரபு அமீரகத்தின் சுல்தான் அல் நியாதியின் விண்வெளிப் பயணம் அடுத்த மாதம் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்னதாக நியாதி நாசா விண்வெளி நிலையத்தில் தனது இறுதிப் பயிற்சியை முடித்தார். விண்வெளிப் பயணம் தொடர்பான ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்றொரு படிக்கல்லாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

சுல்தான் அல் நியாதியின் விண்வெளிப் பயணம் பிப்ரவரி 26-ம் தேதி நிஜமாகும் என நாசா தெரிவித்துள்ளது. முன்னதாக பிப்ரவரி 19 அன்று பயணம் திட்டமிடப்பட்டது. சில தொழிநுட்ப கோளாறுகள் காரணமாக பயணம் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்தனர். நியாதி மற்றும் அவரது குழுவினர் அமெரிக்காவில் உள்ள SpaceX இல் பயிற்சி பெற்றனர்.

நீண்ட காலத்திற்கு விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் 11வது நாடாக ஐக்கிய அரபு அமீரகம் மாறும். விண்வெளி நிலையத்தில் நீண்ட நாள் தங்கிய முதல் அரபு குடிமகன் என்ற பெருமையை சுல்தான் அல் நியாதி பெறுவார் என நம்பப்படுகிறது.