பணியின் போது வலது கை துண்டிக்கப்பட்ட தொழிலாளிக்கு 1.5 லட்சம் திர்ஹம் இழப்பீடு!
அபுதாபி: கிரைண்டிங் இயத்திரத்தால் வலது கை துண்டிக்கப்பட்ட தொழிலாளிக்கு அபுதாபி மேல்முறையீட்டு நீதிமன்றம் 1.5 லட்சம் திர்ஹம் (ரூ.33.2 லட்சம்) இழப்பீடு வழங்கியுள்ளது. பணியிடத்தில் போதிய பாதுகாப்பு அமைப்பை முதலாளி வழங்கத் தவறியதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
பணியின் போது பாதுகாப்புக் குறைபாட்டால் தனது கை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கியதாகக் கூறி 2 லட்சம் திர்ஹாம் இழப்பீடு வழங்கக் கோரி தொழிலாளி ஒருவர் தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதன்மை நீதிமன்றம் வழங்கிய ஒரு லட்சம் திர்ஹாம் போதாது எனக் கூறி தொழிலாளி மேல்முறையீட்டு நீதிமன்றத்தை அணுகினார். அதனை விசாரித்த நீதிமன்றம் இழப்பீடை 1.5 லட்சம் திர்ஹமாக உயர்த்தி உத்தரவிட்டது.