துபாயில் ஆறு வாகனங்கள் மோதி விபத்து; ஒருவர் பலி, ஐந்து பேர் காயம்!
துபாய்: துபாயில் 6 வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஐந்து பேர் காயமடைந்தனர். வியாழக்கிழமை காலை ஷேக் முகமது பின் சயீத் சாலையில் அல் ரஷிதியா பாலம் அருகே இந்த பயங்கர விபத்து நடந்ததாக துபாய் போலீசார் தெரிவித்தனர். விபத்து காரணமாக, சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இரண்டு லாரிகளும், நான்கு சிறிய வாகனங்களும் மோதிக்கொண்டன. ஒரு கார் ஓட்டுநர் உயிரிழந்தார். வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்காததே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர்.
முன்னால் சென்ற பேருந்து மீது லாரி மோதியது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து சிமென்ட் மற்றும் செங்கல் ஏற்றிச் சென்ற மற்றொரு லாரி மற்றும் நான்கு வாகனங்கள் மீது மோதியது.
துபாய் காவல்துறையின் பொது போக்குவரத்து துறையின் இயக்குனர் மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூயி கூறுகையில், இந்த விபத்தை தொடர்ந்து சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.