குவைத்தில் இருந்து வெளிநாட்டவர்களும் ஹஜ் செல்ல பதிவு செய்யலாம்! - பிப்ரவரி 28 கடைசி நாள்
குவைத்தில் இருந்து வெளிநாட்டவர்கள் ஹஜ்ஜுக்கு பதிவு செய்ய அவுகாஃப் (Auqaf) அமைச்சகம் அனுமதிக்கிறது. இந்த ஆண்டு ஹஜ் கடமையை மேற்கொள்ள விரும்பும் நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான பதிவு ஜனவரி 29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என மத விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. விண்ணப்பத்தை அமைச்சகத்தின் இணையதளத்தில் (http://hajj-register.awqaf.gov.kw) சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி பிப்ரவரி 28 ஆகும். இதுவரை ஹஜ் செய்யாதவர்களுக்கு இம்முறை ஹஜ் வாய்ப்பளிக்கப்படுகிறது. ஹஜ்ஜுக்குத் தேர்வுசெய்யும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் பயணிக்க விரும்பும் ஏஜென்சி மூலம் மேலதிக நடைமுறைகளை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் சவுதி அதிகாரிகளின் அனுமதி கிடைத்தவுடன் வெளிநாட்டவர்களின் ஹஜ் பதிவுக்கான அமைப்பு தயாரிக்கப்படும் என அவுகாஃப் அமைச்சகம் அறிவித்துள்ளது.