சவூதியில் புதிய சட்டம் தள்ளிவைப்பா?

https://youtu.be/dk2LI_KljdY சவுதி விசாவுக்கு போலிஸ் கிளியரன்ஸ் சட்டம் தள்ளிவைக்கப்படுமா சவூதி விசாவுக்கான Police Clearance சட்டத்தை தாமதபடுத்துமாறு கோரிக்கை இன்று முதல் புதிய வேலை விசாவில் சவுதி அரேபியாவுக்கு வர விரும்புவோருக்கு இந்தியாவில் இருந்து போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் (பிசிசி) கட்டாயமாக்கப்படும் என முன்னதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து மும்பையில் உள்ள சவுதி தூதரகம் புதிய வேலை விசாவை ஸ்ட்டாம்பிங் செய்யஒப்படைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட்டுகளுடன் பிசிசி சான்றிதழையம் சமர்ப்பிக்குமாறு அனைத்து விண்ணப்ப தரர்களையும் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் அறிவிப்பு செய்யப்பட நிலுவைத் தேதிக்கு முன் முத்திரையிடப்பட்ட விசாக்களுக்கு பிசிசி கட்டாயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிசிசிக்கான அப்ளிகேஷன் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பாஸ்போர்ட் சேவைகளுக்கான பாஸ்போர்ட் சேவா கேந்திரா தளத்தின் மூலம் நிரப்பப்பட வேண்டும். ஆன்லைனில் படிவத்தை பூர்த்தி செய்து, நியமிக்கப்பட்ட சேவா கேந்திராவில் அப்பாயிண்ட்மெண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் நேர்காணல் நியமிக்கப்பட்ட நாளில் நேரில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் போலீஸ் சரிபார்ப்பு நடைபெறும். அதன் பிறகு நேரிலோ அல்லது தபால் மூலமோ சான்றிதழ் வழங்கப்படும் . இந்த செயல்முறைக்கு குறைந்தது 15 முதல் 20 நாட்கள் ஆகும். இந்தியாவில் போலிஸ் வழக்கு அல்லது வேறு ஏதேனும் இருந்தால், அது தீர்க்கப்படும் வரை குறிப்பிட்ட நபர்களுக்கு பொலிஸ் அனுமதி கிடைக்காது. அதன் மூலம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களும், மற்ற குற்றவாளிகளும் இனி புதிய விசாவில் சவுதி அரேபியாவுக்கு வர முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. பின் பிசிசி சான்றிதழ் பெற்ற பிறகு, வழக்கம் போல மருத்துவ உடற்தகுதி சான்றிதழை எடுக்க வேண்டும். அதை தொடர்ந்து விசா ஸ்டாம்பிங் செயல்முறையைத் தொடங்கலாம். இவ்வாறாக பிசிசி கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், வேலை விசா ஸ்டாம்பிங்கில் தாமதம் ஏற்படும் என்று விசா ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன. புதுதில்லியில் உள்ள சவுதி தூதரகத்தில் சவுதி அரேபியாவுக்கான வேலைவாய்ப்பு விசாவிற்கு பிசிசி ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள தூதரக அதிகாரிகள் இந்த விஷயத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. மும்பை துணைத் தூதரகத்திலும் பிசிசி விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கிடையில், பல்வேறு பயண நிறுவனங்களில் புதிய விசா ஸ்டாம்பிங்கிற்காக பல பாஸ்போர்ட்டுகள் நிலுவையில் உள்ளதால் புதிய சிக்கல் எழுந்துள்ளததுக்கு. இவை அனைத்தையும் அந்தந்த விண்ணப்ப காரர்களிடம் திருப்பித் தருவது பிசிசிக்கு கடினமான விஷயமாகும். இந்த காரணத்திற்காக, பயண முகவர்கள் பிசிசி விதியை செயல்படுத்துவதை தாமதப்படுத்துமாறு தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.