சவுதியில் பெண்களின் கைகளால் பாய்ந்து செல்லும் ஹரமைன் எக்ஸ்பிரஸ்!

சவுதியில் பெண்களின் கைகளால் பாய்ந்து செல்லும் ஹரமைன் எக்ஸ்பிரஸ்!

ரியாத்:  மக்காவையும் மதீனாவையும் இணைக்கும் ஹரமைன் ரயிலை ஓட்டுவதற்கான ஹரமைன் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கும் தகுதியை 32 பெண்கள் முடித்துள்ளனர். 450 கிமீ நீளம் கொண்ட இந்த பாதையில் பெண்கள் மணிக்கு 300 கிமீ வேகத்தில் மின்சார ரயில்களை இயக்குவார்கள்.

போக்குவரத்து தளவாடத் துறைக்கு பெண்களின் அதிகாரத்தை விரிவுபடுத்தும் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சவுதி ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சவுதி அரேபியாவில் ரயிலை ஓட்டிய முதல் பெண்மணி என்ற பெருமையை தாரா அலி அல் ஜஹ்ரானி பெற்றுள்ளார்.

போக்குவரத்து துறையில் மட்டுமின்றி, ஹஜ், உம்ரா யாத்ரீகர்களுக்கு சேவை செய்வதிலும், ஹரம் பள்ளிவாசல்களின் பாதுகாப்பிலும் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர்.