மல்டிபிள் விசிட் விசாவில் வருகை தந்தவர்கள் சவுதியை விட்டு வெளியேறாமல் விசாவை நீட்டிப்பது சாத்தியமில்லை! - ஜவாசாத்

மல்டிபிள் விசிட் விசாவில் வருகை தந்தவர்கள் சவுதியை விட்டு வெளியேறாமல் விசாவை நீட்டிப்பது சாத்தியமில்லை! - ஜவாசாத்

ரியாத்: சவுதிக்கு மல்டிபிள் விசிட் விசாவில் வருகை தந்த வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறாமல் விசாவை நீட்டிப்பது சாத்தியமில்லை என்று சவூதி அரேபியாவில் உள்ள கடவுச்சீட்டுகளுக்கான பொது இயக்குநரகம் (ஜவாசாத்) தெளிவுபடுத்தியுள்ளது.  சவுதியை விட்டு வெளியேறாமல் ஆன்லைனில் மல்டிபிள் பேமிலி விசாவை நீட்டிக்க முடியும் என்று சமூக ஊடக வலைதளங்களில் செய்திகள் பரவியதை தொடர்ந்து இந்த செய்தியை ஜவாசாத் வெளியிட்டுள்ளது.

3 மாதங்களுக்குப் பிறகு மல்டிபிள் என்ட்ரி விசிட் விசா காலாவதியாகும் முன் விசா மற்றும் நாட்டை விட்டு புறப்படும் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்று சவுதி ஜவாசத் உறுதிப்படுத்தியுள்ளது.

மல்டிபிள் விசிட் விசா காலாவதியாகும் முன் சவுதியிலிருந்து புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டால், அதன் காலாவதி தேதிக்கு 3 நாட்களுக்குப் பிறகு, மீறுபவர் மீது கடும் அபராதம் விதிக்கப்படும்.

முன்னதாக ஹோஸ்டின் அப்ஷர் கணக்கு மூலம் சிங்கிள் விசிட் விசாவை 3 மாதங்கள் வரை நீட்டிக்க முடியும் என்றும், சவுதி அரேபியாவின் சிங்கிள் விசிட் விசா காலாவதியாகும் 7 நாட்களுக்கு முன்னதாக அதனை நீட்டிக்கப்படலாம் என்றும் ஜவாசத் உறுதி செய்தது. இருப்பினும் அப்ஷர் மூலம் விசாவை நீட்டிக்க, செல்லுபடியாகும் மருத்துவ காப்பீடு தேவைப்படுகிறது. எவ்வாறாயினும் 6 மாதங்களுக்கு மேல் எந்த வகை விசிட் விசாவிலும் சவுதியில் தங்க இயலாது. அவர்கள் நாட்டை விட்டு கண்டிப்பாக வெளியேற வேண்டும் என ஜவாசாத் உறுதி செய்துள்ளது.