சவூதி டூட்டி ஃப்ரீ ஷாப்களில் மதுபானங்கள் விற்பனை கிடையாது.!

சவூதி டூட்டி ஃப்ரீ ஷாப்களில் மதுபானங்கள் விற்பனை கிடையாது.!

சவூதி அரேபியாவின் ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையம் (ZATCA) சவுதியின் நுழைவு விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் புதிதாக நிறுவப்பட்ட டூட்டி ஃப்ரீ ஷாப்களில் (வரியில்லா சந்தை) மதுபானங்கள் விற்கப்படாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

டூட்டி ஃப்ரீ ஷாப்களை நிறுவுவதற்கான விதிகள் மற்றும் தேவைகளின்படி, சவுதியில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் தயாரிப்புகள் மட்டுமே விற்க அனுமதிக்கப்படும் என்றும் ZATCA தெரிவித்துள்ளது.

ஜித்தாவில் உள்ள கிங் அப்துல்லாஜிஸ் சர்வதேச விமான நிலையம், ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம், தமாமில் உள்ள கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையம் மற்றும் மதீனாவில் உள்ள இளவரசர் முஹம்மது பின் அப்துல் அஜீஸ் விமான நிலையத்தின் புறப்பாடு முனையங்களில் தற்போது டூட்டி ஃப்ரீ ஷாப்கள் அமைந்துள்ளன.