கத்தாருக்கு விசிட் விசாவில் வருபவர்களுக்கும் மருத்துவக் காப்பீடு கட்டாயம்..!

கத்தாருக்கு விசிட் விசாவில் வருபவர்களுக்கும் மருத்துவக் காப்பீடு கட்டாயம்..!

தோஹா கத்தாரில் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் முதல் கட்டம் பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்குகிறது. அதன்படி பிப்ரவரி 1 முதல் நாட்டிற்கு வருகை தரும் அனைவருக்கும் சுகாதார காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காப்பீடு இல்லாமல் விசிட்டிங் விசாவைப் பெற முடியாது என பொது சுகாதார அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

திட்டத்தை படிப்படியாக செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக பார்வையாளர்களுக்கு இந்தக் கொள்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார அமைச்சகத்தில் பதிவு செய்யப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பாலிசி எடுக்கப்பட வேண்டும். பார்வையாளர்களுக்கான காப்பீட்டுக் கொள்கையில் அவசர மற்றும் விபத்து சேவைகள் மட்டுமே உள்ளன. இதன் மாதாந்திர பிரீமியம் 50 ரியால். கூடுதல் சேவைகளை உள்ளடக்கிய பாலிசியாந்து பிரீமியத்தை அதிகரிக்கும்.

சர்வதேச சுகாதார காப்பீடு உள்ளவர்களுக்கு, பாலிசி கத்தாரை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. கத்தாரில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றின் மூலம் பாலிசியை வெளியிட வேண்டும் என்றும் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

காப்பீடு தொடர்பான தகவல்களுக்கு கீழே உள்ள இணையதளத்தைப் பார்க்கவும். https://www.moph.gov.qa/english/derpartments/policyaffairs/hfid/Pages/Health-Insurance-Scheme.aspx