கத்தாரின் கால்பந்து, கலை மீதான ஆர்வத்தைக் குறிக்கும் ‘கோல்போஸ்ட்’ நிறுவல்கள்!

கத்தாரின் கால்பந்து, கலை மீதான ஆர்வத்தைக்  குறிக்கும் ‘கோல்போஸ்ட்’ நிறுவல்கள்!

தோஹா: கத்தாரின் 10 முக்கிய சுற்றுலா தலங்களில் கால்பந்து கோல் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரம் 'போஸ்ட் ஆஃப் கத்தார்' என்று அழைக்கப்படுகிறது.

இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, அர்ஜென்டினா, உருகுவே மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள், முந்தைய ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்றவர்கள் மற்றும் கத்தார் கலைஞர்களால் 10 கோல்போஸ்ட்கள் தயாரிக்கப்பட்டன.

இந்த நாடுகளுக்கும் கத்தாருக்கும் இடையிலான கலை மற்றும் கட்டிடக்கலை ஒற்றுமைகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த வடிவமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

மியா பார்க், ஃபிளாக் பிளாசா, சூக் வாகிஃப், லுசைல் சிட்டி, கத்தாரா கலாச்சார கிராமம் (Katara Cultural Village), பியர்ல் கத்தார், பிளேஸ் விண்டாம், ஆஸ்பியர் சோன், சீலைன் பீச் மற்றும் வெஸ்ட்பே பீச் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.

மியா பார்க் MIA Park

ஃபிளாக் பிளாசா Flag Plaza

சூக் வாகிஃப் Souq Waqif

லுசைல் சிட்டி Lusail Marina City

கத்தாரா கலாச்சார கிராமம் Katara Cultural Village

பியர்ல் கத்தார் The Pearl - Qatar

பிளேஸ் விண்டாம் Place Vendome

ஆஸ்பியர் சோன் Aspire Zone

சீலைன் பீச் Sealine Beach

வெஸ்ட்பே பீச் West Bay beach