கத்தாரில் விற்பனையை தொடங்கியது அல் பெய்க்! - அலைமோதிய கூட்டம்!
தோஹா: உணவுப் பிரியர்களின் விருப்பமான பிராண்டான அல் பெய்க் கத்தாரில் தனது விற்பனையை தொடங்கியுள்ளது. முதல் நாளிலேயே அல் மெசிலா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பரந்த பகுதியில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டினரின் பெரும் கூட்டம் திரண்டது.
அல் பெய்க்கிற்காக மணிக்கணக்கில் வரிசையில் நிற்கும் காட்சி கத்தாரில் புதுமையாக இருந்தது. சவுதி அரேபியாவின் முன்னணி துரித உணவு பிராண்டான அல் பெய்க், இந்த ஆண்டு ஐந்து மொபைல் யூனிட்களை கத்தாரில் அமைக்கிறது.