FIFAவின் முதல் ஸ்டோர் தோஹா ஹமாத் விமான நிலையத்தில் திறப்பு!
தோஹா: உலகின் முதல் ஃபிஃபா (FIFA) ஸ்டோர் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்பட்டது. கத்தார் ஏர்வேஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி அக்பர் அல் பேக்கர் மற்றும் விமான நிலைய இயக்க அதிகாரி என்ஜி. பத்ர் முஹம்மது அல்மீர் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
தொடக்க விழாவின் ஒரு பகுதியாக, உலகக் கோப்பையின் அசல் கோப்பையும் பயணிகளுக்காக காட்சிப்படுத்தப்பட்டது. ஜெர்சிகள், தொப்பிகள், ஜாக்கெட்டுகள், கால்பந்துகள், விளையாட்டு பாகங்கள், உலகக் கோப்பை அதிகாரப்பூர்வ தயாரிப்புகள், நினைவு பரிசு நாணயங்கள், அரபு காபி கோப்பைகள், மல்டி-சார்ஜிங் கேபிள், போட்டி டிக்கெட் ஃபிரேம் மற்றும் லைப் நினைவு பரிசுகள் ஆகியன விற்பனைக்காக உள்ளன.
FIFA Rewind பகுதியில் மெக்சிகோ 70, பிரான்ஸ் 98, தென்னாப்பிரிக்கா 10 மற்றும் உருகுவே 30 உள்ளிட்ட பிரபலமான FIFA உலகக் கோப்பைகளின் கிளாசிக் கிட்களும் உள்ளன. டி-ஷர்ட்கள், ஜாக்கெட்டுகள் மற்றும் ஹூடிகளை வாங்கலாம்.
உலகக் கோப்பையில், அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் பயன்படுத்தப்பட்ட அல் ஹில்ம் பந்தையும், காலிறுதி வரை பயன்படுத்தப்பட்ட அல் ரிஹ்லா பந்தையும் வாங்கலாம். புதிதாக விரிவாக்கப்பட்ட நார்த் பிளாசாவில் உள்ள ஆர்க்கிட்டில் பகுதியில் FIFA ஸ்டோர் அமைந்துள்ளது.