‘எந்தக் கனவும் பெரிதல்ல’- இடுப்பிற்கு கீழே வளர்ச்சி நின்று போனாலும் உலகக் கோப்பை அரங்கில் ஜொலிக்கிறார் கானிம் அல் முஃப்தா!

‘எந்தக் கனவும் பெரிதல்ல’- இடுப்பிற்கு கீழே வளர்ச்சி நின்று போனாலும் உலகக் கோப்பை அரங்கில் ஜொலிக்கிறார் கானிம் அல் முஃப்தா!

“எனது பெயர் கானிம் அல்முஃப்தா மற்றும் நான் இடுப்பில் இருந்து வளர்ச்சி குன்றிய காடால் ரிக்ரஷன் சிண்ட்ரோம் (சிடிஎஸ்) Caudal regression syndrome நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். என் பெற்றோர் எனக்கு கானிம் என்று பெயரிட்டனர், அதாவது போர்களில் வெற்றி பெற்றவர்கள். எனவே எந்த கனவும் பெரிதல்ல என்பதை உலகுக்கு காட்ட விரும்புகிறேன். எந்த ஊனமும் உங்கள் கனவுகளில் இருந்து உங்களைத் தடுக்க முடியாது என்பதை நான் காட்ட விரும்புகிறேன்'' இது  20 வயதான மாற்றுத்திறனாளியான கானிம் அல் முஃப்தாஹேவை கத்தாரில் உள்ள FIFA உலகக் கோப்பை தூதராக அறிமுகப்படுத்திய ஆகஸ்ட் 02 அன்று கானிம் வெளியிட்ட வீடியோவின் வார்த்தைகள். 

இந்த நம்பிக்கை வார்த்தைகள் வீண் போகவில்லை என்பதை உலகக் கோப்பை போட்டியின் தூதர் பதவியை அடைந்ததன் மூலம் கனிம் நிரூபித்தார். 

கத்தாரில் ஆரம்பமான போட்டியில் கானிம் உலகின் கவனத்தின் மையமாக மாறினார். திறப்பு விழாவிற்கு முன்னதாக பல நிகழ்ச்சிகள் நடைபெற்ற போது, ​​ஏற்பாட்டாளர்கள் புனித குர்ஆனை ஓதுவதற்கு கானிமை தேர்ந்தெடுத்தனர். உலகக் கோப்பையின் மேடையில் அமெரிக்க நடிகரும் இயக்குனருமான மோர்கன் ஃப்ரீமேனுடன் கானிம் பேசினார், அது தீவிர வாழ்க்கைக்காக ஏங்குபவர்களுக்கு ஒரு அற்புதமான காட்சியாக இருந்தது.

கனிம் மே 5, 2005 இல் பிறந்தார். காடால் ரீக்ரஷன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டாலும் தன் வாழ்க்கையைத் தடுமாற விடவில்லை. அவர் அரசியல் அறிவியலில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். ஊனமுற்றாலும், ஸ்கூபா டைவிங், ஸ்கேட்போர்டிங், ராக் க்ளைம்பிங் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்று வருகிறார்.