குடியிருப்பு பகுதிகளில் கனரக வாகனங்களை நிறுத்தினால் 25000 ரியால் அபராதம்

குடியிருப்பு பகுதிகளில் கனரக வாகனங்களை நிறுத்தினால் 25000 ரியால் அபராதம்

கத்தாரில் நகராட்சி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி குடியிருப்பு பகுதிகளில் சட்ட  விரோதமாக காண ரக வாகனங்களை நிறுத்தினால் 25000 ரியல்கள் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. முன்னதாகவே  இந்த மாத தொடக்கத்தில் இருந்து குடியிருப்பு பகுதிகளில் லாரிகள் மற்றும் பெரிய வாகனங்களை நிறுத்துவதற்கு எதிராக அமைச்சகம் எச்சரித்திருந்தது எனபது குறிப்பிட தக்கது.

செப்டம்பர் 4 ஆம் தேதி தொடங்கிய இது குறித்த பிரச்சாரத்தில், தோஹா நகராட்சிக்குள் சட்டவிரோதமாக நிறுத்தப்பட்டதற்காக 313 லாரிகள், பேருந்துகள் மற்றும் மோட்டார் கேபின்கள் ஆகியவற்றை மாற்ற சொல்லி நோட்டீஸ் அனுப்பப்பட்டன. மேலும் குறிப்பிட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு மேற்கட்ட  நடவடிக்கையைத் தவிர்க்க, அறிவிக்கப்பட்ட  காலத்திற்குள் வாகனங்களை அகற்றுமாறு அறிவிப்புகள் ஒட்டப்பட்டுள்ளன