ஃபுஜைராவில் ஆலங்கட்டி மழை..!

ஃபுஜைராவில் ஆலங்கட்டி மழை..!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் ஃபுஜைராவின் மைதாக் பகுதி மற்றும் மசாபி - தௌபன் சாலையில் ஆலங்கட்டி மழையுடன் கூடிய கனமழை பெய்துள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் ( NCM) தெரிவித்துள்ளது . ஆலங்கட்டி மழையினால் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் . இந்த மழையைக் காட்டும் வீடியோ ஒன்றில் குடியிருப்பாளர்கள் பனிக்கட்டிகளை சேகரிப்பதையும் காரின் டேஷ்போர்டில் பனிக்கட்டிகளை வைத்து அரிய வானிலையைப் படம்பிடித்து மகிழ்ச்சியுடன் கூச்சலிடுவதையும் காணலாம் .

மேலும் மற்றொரு வீடியோவில், மலைப்பாங்கான பகுதி வழியாகச் செல்லும் போது ஆலங்கட்டி மழையின் மூலம் கார்கள் மற்றும் சாலைகளில் பனிக்கட்டிகள் சிதறி விழுவதைக் காணலாம் . இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் மஞ்சள் , ஆரஞ்சு மற்றும் சிவப்பு எச்சரிக்கைகளை தேசிய வானிலை மையம் வெளியிட்டுள்ளது . மேலும் வெளியில் செல்லும் குடியிருப்பாளர்கள் மிக கவனத்துடன் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.