எமிரேட்ஸ் தினத்தை முன்னிட்டு துபாய் ரீல்ஸ் சினிமாஸில் 51% டிக்கெட் தள்ளுபடி!

எமிரேட்ஸ் தினத்தை முன்னிட்டு துபாய் ரீல்ஸ் சினிமாஸில் 51% டிக்கெட் தள்ளுபடி!

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 51வது தேசிய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, துபாயில் உள்ள ரீல் சினிமாஸ் டிக்கெட் விலையில் 51 சதவீதம் தள்ளுபடி அறிவித்துள்ளது. இது தொடர்பாக புதன்கிழமை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. தேசிய தின கொண்டாட்டங்களுக்காக நாட்டின் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை இந்த தள்ளுபடி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று நாட்களில், துபாய் மால், துபாய் மெரினா மால், ஜெபல் அலி ரிக்ரியேஷன் கிளப், ரோவ் டவுன்டவுன், தி ஸ்பிரிங்ஸ் சூக் மற்றும் தி பாயிண்ட் ஆகிய இடங்களில் உள்ள ரீல்ஸ் சினிமாஸின் திரையரங்குகளில் திரைப்பட ஆர்வலர்கள் 51 சதவீத தள்ளுபடியை அனுபவிக்க முடியும். இந்த நாட்களில் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் என்றும் ரீல்ஸ் சினிமாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.