அமீரகத்தில் சேலரி வாங்குவதற்கு முன்பே 50% அட்வான்ஸ் சேலரி தரும் வங்கி..!

அமீரகத்தில் சேலரி வாங்குவதற்கு முன்பே 50% அட்வான்ஸ் சேலரி தரும் வங்கி..!

மாத சம்பளம் நம் வங்கி கணக்கில் போடும் முன்னரே 50% சம்பளத்தை எடுத்துக் கொள்வதற்கான அனுமதியை அளிக்கும் புதிய திட்டத்தை அமீரகத்தில் உள்ள அபுதாபி இஸ்லாமிக் பேங்க் (ADIB) அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய அம்சமானது, வங்கியின் பிரத்யேக மொபைல் அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வழக்கமான சம்பள நாளுக்கு முன்னரே வாடிக்கையாளர்கள் தங்களின் சம்பளத்தில் 50% வரை பெற அனுமதிக்கும் என கூறப்பட்டுள்ளது. 

முன்னணி இஸ்லாமிக் நிதி நிறுவனமான இந்த வங்கி, இந்த ஸ்கீமினை ‘Yusr- ADIB Salary Advance' என்று பெயரிட்டுள்ளது . புதுமையான சேவைகளை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த திட்டம் முன்கூட்டியே சம்பளத் தொகையை உடனடியாகப் பெற வங்கி அதன் வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த “ADIB Yusr Salary Advance Finance” ஸ்கீமை மொபைல் பேங்கிங் செயலி மூலம் அணுகலாம் என்றும் தற்போதுள்ள ADIB சம்பள பரிமாற்ற (salary transaction) வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் நிதிகளை நிர்வகிக்கவும் , அவர்களின் குறுகிய கால நிதி தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறைந்தபட்சம் மாதம் 5,000 திர்ஹம் சம்பளம் பெறும் நபர்களுக்கே இது வழங்கப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

குறைந்தபட்சம் கடந்த மூன்று மாதங்களாக ADIBக்கு சம்பளம் வரவு வைக்கப்பட்டுள்ள தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு சம்பள முன்பணமானது கிடைக்கும் வகையில் இந்த ஸ்கீம் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் இந்த ஸ்கீமைப் பெற தகுதியானவர்களா என்பதை மொபைல் ஆப் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.