சவுதி: 3 மலையாளிகளை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றிய முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி..!

சவுதி: 3 மலையாளிகளை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றிய முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி..!

ரியாத்: கேரளாவில் முந்தைய யுடிஎப் அரசாங்கத்தை வழிநடத்திய உம்மன் சாண்டி, கேரளாவின் பிரபலமான முதல்வர்களில் ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.  கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, உம்மன் சாண்டிக்கு இன்னும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டு மலையாளிகளை உம்மன் சாண்டி தன் கையிலிருந்து பணம் கொடுத்து காப்பாற்றியுள்ளார். 

இதோ அதன் விவரம்...

கடந்த 2008ஆம் ஆண்டு கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த சுதிர் முஸ்தபா, மன்சூர் ஜைனுல் ஆபிதீன் மற்றும் முஹம்மது ரபீக் ஆகியோருக்கு சவுதி ஷரியா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. கொல்லத்தை சேர்ந்த நௌஷாத் கொலை வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. மூவரும் ரியாத்தின் அல்-ஹேர் சிறையில் மரணதண்டனைக்காக காத்திருந்தனர். 

அதன்பிறகு, மூன்று பேரின் குடும்பத்தினரும் உதவி கேட்டு அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டியை அணுகினர். மரண தண்டனையை தவிர்க்க குடும்பத்தினர் உதவி கோரினர். மரண தண்டனையைத் தவிர்க்க, பாதிக்கப்பட்டவரின் குடும்பம் மன்னிக்கத் தயாராக இருக்க வேண்டும். மேலும், கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்திற்கு இழப்பீடு பணம் வழங்கப்பட வேண்டும். 

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் நண்பரான உனைஸ், ரியாத்தில் உள்ள சமூக சேவகர் ஷிஹாப் கொடுகாட்டின் உதவியுடன் இந்திய தூதரகத்தை அணுகினார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மன்னிப்பு கிடைத்தால் இழப்பீடு பணம் செலுத்த தயாராக இருப்பதாக குடும்பத்தினர் தூதரகத்திற்கு தெரிவித்தனர். இதையடுத்து இதற்கான பணிகளை முதல்வர் அலுவலகம் முடுக்கிவிட்டது. உம்மன் சாண்டியின் அலுவலகம் வர்கலாவைச் சேர்ந்த ஷாகிர் மூலம் நடவடிக்கைகளை நகர்த்தியது. கொல்லப்பட்ட உனைஸின் குடும்பத்தினர் குற்றவாளிகளை மன்னிக்க ஒப்புக்கொண்டனர்.

50 லட்சம் இழப்பீடு பணமாக கேட்டனர். குற்றம் சாட்டப்பட்ட மூவரின் குடும்பத்தினரின் சம்மதத்துடன், இந்திய தூதரகம் நீதிமன்றத்தில் மன்னிப்பு கடிதத்தை சமர்ப்பித்தது. இதன் மூலம் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் மரண தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதே சமயம் 9 ஆண்டுகள் சிறை தண்டனை மட்டும் குறைக்கப்படவில்லை. இந்த தண்டனை முடிந்ததும், குற்றவாளி வீடு திரும்பினார். ஆனால் வழக்கு முடிவுக்கு வரவில்லை. காரணம், கொலையுண்டவரின் குடும்பத்தினர் இழப்பீடு பணத்தை ஏற்றுக்கொண்ட ஆவணம் நீதிமன்றத்துக்கு வரவில்லை. முதலில், குற்றம் சாட்டப்பட்ட 3 பேரின் குடும்பத்தினரும் தலா ரூ.10 லட்சம் வழங்குவதாக உம்மன் சாண்டியிடம் கூறப்பட்டது. ஆனால், அந்தத் தொகையைச் செலுத்தும் அளவுக்கு தங்களிடம் நிதி இல்லை என்று பின்னர் தெரிவித்தனர்.

இதற்குள் ஆண்டுகள் கடந்து, உம்மன் சாண்டி அரசின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ரஃபீக் கோவிட் காரணமாக இறந்தார். இதனால், உம்மன் சாண்டி தனது கையிலிருந்து ரத்தப் பணத்தை செலுத்த வேண்டியதாயிற்று. கொலையுண்ட உனைஸின் குடும்பத்திற்கு உம்மன் சாண்டி ரூ.50 லட்சம் கொடுத்து, நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் உதவியுடன் வழக்கை முடித்து வைத்தார். இந்த விவகாரத்தில் முதல்வர் பதவியை இழந்தாலும் உம்மன் சாண்டி ஒரு மீடபராகவே உள்ளார் என சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.