வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருது அறிவிப்பு!
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருது அறிவிப்பு!
டெல்லி: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இம்மாதம் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பிரவாசி பாரதிய திவாஸ் சம்மேளனத்தை முன்னிட்டு வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 27 பேருக்கு விருதை குடியரசுத் தலைவர் அறிவித்தார்.
மருத்துவர் அலெக்சாண்டர் மாலிகல் ஜான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொழிலதிபர் சித்தார்த் பாலச்சந்திரன் மற்றும் ஃபெடெக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் சுப்ரமணியம் ஆகியோர் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கியதற்காக விருது பெற்றுள்ளனர். வளைகுடா பகுதியில் இருந்து இந்த விருதைப் பெற்ற ஒரே வெளிநாட்டவர் சித்தார்த் பாலச்சந்திரன் ஆவார். பிரவாசி பாரதிய சம்மான் என்பது வெளிநாட்டினருக்கு நாடு வழங்கும் மிகப்பெரிய விருதாகும்.
விருது பெற்றவர்களின் விவரங்கள்:
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெகதீஷ் சென்னுபதி, பூட்டானின் சஞ்சீவ் மேத்தா, பிரேசிலின் திலீப் லவுண்டோ மற்றும் புருனேயைச் சேர்ந்த அலெக்சாண்டர் மாலிக்கல் ஜான் ஆகியோர் மருத்துவத்தில் விருதினை பெறுகிறார்கள்.
சமூக நலனில் கனடாவின் வைகுண்டம் ஐயர் லட்சுமணன், ஜோகிந்தர் சிங், ஜெர்மனியைச் சேர்ந்த அமல் குமார் முகோபாத்யாய், எத்தியோப்பியாவின் கண்ணன் அம்பலம், இஸ்ரேலின் ரீனா வினோத் புஷ்கர்னா, காங்கோ குடியரசின் பர்மானந்த் சுகுமல் தஸ்வானி, மோகன்லால் ஹீரா, இலங்கையைச் சேர்ந்த சிவகுமார் நடேசன், ரினிடாட் மற்றும் டொபாகோவின் பிராங்க் ஆர்தர் சீபர்சாட், சுரினாமின் தேவசந்திரபோஸ் ஷர்மன் மற்றும் தெற்கு சூடானின் சஞ்சய்குமார் சிவபாய் படேல் ஆகியோர் விருது பெறுகின்றனர்.
வணிகத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சித்தார்த் பாலச்சந்திரன், போலந்து நாட்டைச் சேர்ந்த கைலாஷ் சந்திர லத், சிங்கப்பூரின் பியூஷ் குப்தா கல்வியில் ஜப்பானின் மக்சூதா சர்ஃபி ஷியோதானி, மெக்சிகோவின் ராஜகோபால் அமித், அமெரிக்காவின் தர்ஷன் சிங் தலிவால், அமெரிக்காவைச் சேர்ந்த ராஜேஷ் சுப்ரமணியம், உஸ்பெகிஸ்தானின் அசோக் குமார் திவாரி ஆகியோர் விருது பெறுகின்றனர்.
கலை மற்றும் கலாச்சாரத்தில் குரோஷியாவின் நிஜ்ஜார், தகவல் தொழில்நுட்பத்தில் டென்மார்க்கின் ராம்ஜி பிரசாத், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சுவிட்சர்லாந்தின் அர்ச்சனா சர்மா, அரசியல் மற்றும் சமூக நலனில் கயானாவின் முகமது இர்பான் அலி, ஊடகத்தில் இங்கிலாந்தின் சந்திரகாந்த் பாபுபாய் படேல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் சாதித்துள்ள சிறப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் விருது பெறுகிறார்கள்.