திருவனந்தபுரம்-தோஹா இடையே கத்தார் ஏர்வேஸின் ட்ரீம் லைனர் சேவை தொடக்கம்..!
தோஹா: 254 சீட்ஸ் மற்றும் 22 பிஸ்னஸ் கிளாஸ் சீட்ஸ்களைக் கொண்ட கத்தார் ஏர்வேஸின் ட்ரீம் லைனர் சேவை திருவனந்தபுரம்-தோஹா செக்டரில் தொடங்கியுள்ளது. இந்த டிரீம் லைனர் வாரத்தில் இரண்டு நாட்கள் செயல்படும்.
மற்ற நாட்களில், தற்போது சேவையில் இருக்கும் அதே A320 விமானம் இயக்கப்படும். A320 விமானத்தில் 160 சீட்ஸ்கள் மட்டுமே இருந்த நிலையில், கத்தார் ஏர்வேஸின் ட்ரீம் லைனர் சேவை அறிவிப்பால் கூடுதல் பயணிகள் பிரயாணம் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.