17வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு - குவைத் தூதரக ஆடிட்டோரியத்தில் நேரடி ஒளிபரப்பு!

17வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு - குவைத் தூதரக  ஆடிட்டோரியத்தில் நேரடி ஒளிபரப்பு!

குவைத் சிட்டி: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் 17வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின் நேரடி ஒளிபரப்பு தூதரக ஆடிட்டோரியத்தில் அமைக்கப்படும் என்று குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஜனவரி 9 ஆம் தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரையும், ஜனவரி 10 ஆம் தேதி மதியம் 1 மணி முதல் 2:30 மணி வரையும் நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து இந்திய குடிமக்களும் தூதரகத்திற்கு அழைக்கப்படுவதாகவும் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடியும், குடியரசுத் தலைவரும் கூட்டத்தில் உரையாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.