பாலைவனத்தின் பச்சைப் போர்வை! - ஷார்ஜா கோதுமை பண்ணை

பாலைவனத்தின் பச்சைப் போர்வை! - ஷார்ஜா கோதுமை பண்ணை

பாலைவனத்தை வளமான விவசாய நிலமாக மாற்றுவதன் ஒரு பகுதியாக ஷார்ஜாவில் தொடங்கப்பட்ட கோதுமைப் பண்ணை முளைத்து பசுமையாக மாறியுள்ளது. பாலைவனத்தில் ஒரு அரிய காட்சிக்கு வழி வகுத்த இந்த திட்டம்,

ஷார்ஜா சுப்ரீம் கவுன்சிலின் உறுப்பினரும் ஆட்சியாளருமான ஷேக் டாக்டர் சுல்தான் பின் முகமது அல் காசிமி அவர்களால் தொடங்கப்பட்டது. 

இத்திட்டத்தின் முதல் கட்டம் 400 ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ளது. ஷார்ஜா ஆட்சியாளர் மிலீஹாவில் உள்ள பண்ணைக்குச் சென்ற வீடியோ காட்சிகளை ஷார்ஜா அரசு ஊடகப் பணியகம் வெளியிட்டுள்ளது. பயிர்களின் வளர்ச்சி நிலை குறித்து விளக்கும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு மாதங்களுக்குள் கோதுமை அறுவடை செய்யப்படும். 2024 ஆம் ஆண்டுக்குள், திட்டத்தின் இரண்டாம் கட்டம் 880 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடியை விரிவுபடுத்தும். 2025ம் ஆண்டுக்குள் 1,400 ஹெக்டேராக விரிவுபடுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.