கட்டி அணைப்பது ஓர் சிறந்த நிவாரணி!
ஒருவரை கட்டிப்பிடிப்பது அல்லது அணைப்பது என்பது சிறந்த வைத்தியம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த கட்டிப்பிடி வைத்தியம் மன அழுத்தம், இதய நலன், தலைவலி, இரத்த அழுத்தம், உடல் எடை குறைப்பு போன்றவற்றுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.
அறிவியல் ரீதியாகவே கட்டிப்பிடிப்பது இதயத்திற்கு ஓர் நல்ல வைத்தியம் என்று கூறப்பட்டுள்ளது. உங்கள் விருப்பமானவரை அமைதியான சூழலில் கட்டியணைத்துக் கொள்வதால் இதயம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் கோளாறுகள் குறையும்.
தம்பதியர் மட்டுமின்றி பெற்றோர்கள், உடன் பிறப்புகள் கட்டியணைத்துக்கொள்ளும் போது மன இறுக்கம் குறைகிறதாம். இதனால் இறுக்கம் குறைந்த மனநிலை மேலோங்குகிறது. உடலும், மனதும் லேசாக இருப்பது போன்று உணர முடிகிறது.
20 வினாடி ஒருவரை கட்டிபிடித்தால் இருவர் உடம்பிலும் Oxytocin சுரக்க ஆரம்பிக்குமாம். இது ஒருவரின் மேல் வைக்கும் நம்பிக்கையை முடிவு செய்கிற ஒருவித கெமிக்கலாகும்.
நிறை மாத கர்ப்பத்தில் பிரசவம் தாமதமானால் இந்த கெமிக்கலை பயன்படுத்தி பிரசவத்துக்கு தூண்டும் முயற்சி மேலை நாடுகளில் உள்ளது. நட்பு முதல் காதல், செக்ஸ் வரை பல்வேறு நம்பிக்கை செயல்களுக்கு உடலில் சுரந்து நம்பிக்கைக்கு அச்சாரம் போடும் கெமிக்கல் இது.
சக உயிர் மேல வைக்கிற நம்பிக்கை தான் உறவை பலப்படத்தும். காதல், காமம், குழந்தை பிறப்பு இவையனைத்துக்கும் நம்பிக்கை வேண்டும். அதற்கு Oxytocin வேண்டும். Oxytocin வேண்டுமென்றால் கட்டிப்பிடிக்க வேண்டும்.
வீட்டில் உள்ள டீன் ஏஜ் குழந்தைகள் உங்கள் பேச்சை நம்பவும், கேட்கவும் வேண்டுமானால் அடிக்கடி அவர்களை தொட்டு, கட்டிபிடிக்க வேண்டும். ஆனால் ஏனோ நாம் அதனை செய்ய தயங்குகிறோம். ஆனால், அவர்களின் நண்பர்கள் இதனை செய்வார்கள். அதனால் தான் பெற்றோர்களைவிடவும், துணையை விடவும் நண்பர்களை தான் அவர்கள் நம்புவார்கள். ஆகவே, கட்டிப்பிடிப்பது என்பது உடல் மனம் சார்ந்த ஒரு சிறந்த நிவாரணியாக உள்ளது.