குவைத் இந்திய தூதரகத்தில் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சி

குவைத் இந்திய தூதரகத்தில் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சி

குவைத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு வலுவாக இருப்பதாகவும், இரு நாடுகளின் தலைமையும் பலதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை மிகவும் பாராட்டுவதாகவும் இந்திய தூதர் டாக்டர் ஆதர்ஷ் ஸ்வைகா தெரிவித்தார். குவைத்தில் இந்திய குடியரசு தின விழாவின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சியில் இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக  குவைத் வெளிவிவகார அமைச்சர் மன்சூர் அய்யாத் அல் ஒதைபி கலந்து கொண்டார். பட்டத்து இளவரசரின் அலுவலக துணைச் செயலாளர் மசின் அல் எஸ்சா, தூதரக பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள் மற்றும் குவைத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். குவைத்தில் உள்ள சுமார் 10 லட்சம் இந்திய சமூகம் இரு நாடுகளுக்கும் இடையே வாழும் பாலமாக இருப்பதாக டாக்டர் ஆதர்ஷ் ஸ்வைகா கூறினார்.