ஹோட்டல் குடியிருப்புகளில் ஆய்வு - சட்டவிரோதமாக தங்கியிருந்த 33 வெளிநாட்டவர்கள் கைது!

ஹோட்டல் குடியிருப்புகளில் ஆய்வு -  சட்டவிரோதமாக தங்கியிருந்த 33 வெளிநாட்டவர்கள் கைது!

குவைத் சிட்டி: குவைத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறியும் நோக்கில் உள்துறை அமைச்சகம் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், ஹோட்டல் குடியிருப்புகள் மற்றும் சில நிறுவனங்களில் நடத்தப்பட்ட விசாரணையில் 33 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடியிருப்பு மற்றும் வேலைவாய்ப்பு சட்டத்தை மீறிய பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். இது தவிர, சட்டவிரோதமாக வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் இரண்டு முகவர் அலுவலகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மூடப்பட்டன. ரெய்டின் போது குடியுரிமை விதிகளை மீறிய 10 வெளிநாட்டவர்கள் இங்கு தங்கவைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சம்பந்தப்பட்ட துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.