குவைத்தில் டிச.11 ஞாயிறு முதல் ‘விண்டர் வொண்டர்லேண்ட்..!’ திறப்பு!

குவைத்தில் டிச.11 ஞாயிறு முதல் ‘விண்டர் வொண்டர்லேண்ட்..!’ திறப்பு!

குவைத் சிட்டி: குளிர்கால ‘வொண்டர்லேண்ட்’ Winter Wonderland கேளிக்கை பூங்கா ஞாயிற்றுக்கிழமை முதல் பொதுமக்களுக்காக திறக்கப்படும். குளிர்காலத்தை கொண்டாட பூங்காவில் அனைத்து வசதிகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக டூரிஸ்ட் எண்டர்பிரைசஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். விடுமுறை நாட்களில் மதியம் 1 மணி முதல் 12 மணி வரையிலும், மற்ற நாட்களில் மாலை 5 மணி முதல் 12 மணி வரையிலும் பூங்கா திறந்திருக்கும்.

அனைத்து வயதினரையும் கவரும் வகையில் எண்டர்டெய்ன்மெண்ட் சவாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.  நுழைவு கட்டணம் ஐந்து தினார். ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சம் 10 டிக்கெட்டுகள் மட்டுமே அனுமதிக்கப்படும். நான்கு வயது வரையிலான குழந்தைகள் நுழைவு இலவசம்.

இத்திட்டம் நான்கு மாதங்களில் முடிக்கப்பட்டது. டூரிஸ்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் முகமது அல் சகாஃப் கூறுகையில், உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் தங்கள் குடும்பத்துடன் வந்து குளிர்காலத்தை கொண்டாட அனைத்து வசதிகளும் இந்த பூங்காவில் இருக்கும் என்றும், சாகசத்தையும் ஆர்வத்தையும் விரும்புவோருக்கு குளிர்கால அதிசயம் சிறந்த அனுபவமாக இருக்கும் எனவும் தெரிவித்தார். பார்வையாளர்களுக்காக விசாலமான பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.